'பேச்சிலர்' நடிகை திவ்யபாரதி வீடியோ..!

 
1

‘பேச்சிலர் படத்தில் நாயகியாக நடித்தவர் திவ்யபாரதி என்பதும் அந்த படத்தில் அவரது கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த போதிலும் அதன் பிறகு அவருக்கு பெரிய அளவில் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதனை அடுத்து இன்ஸ்டாகிராமில் கிளாமராக களமிறங்கிய திவ்யபாரதி அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பதும் சில புகைப்படங்கள் எல்லை மீறி கிளாமராக இருப்பதை அடுத்து ரசிகர்கள் ரசித்து வந்தாலும் திரை உலகினர் அவருக்கு பெரிய அளவில் வாய்ப்பை கொடுக்கவில்லை.

இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் தனது 25 வது படமான ’கிங்ஸ்டன்’ என்ற திரைப்படத்தில் திவ்யபாரதியை நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் அந்த படத்தில் அவர் நடித்து வருகிறார் என்பதும் இந்த படம் வெளியானவுடன் அவருக்கு தமிழ் திரை உலகில் ஒரு திருப்புமுனை ஏற்படும் என்று கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் 3 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் வைத்திருக்கும் திவ்யபாரதி சற்று முன் இலங்கை சுற்றுப்பயணம் செய்த போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்துள்ளார். அதில் ஒரு வீடியோவில் அவர் நீச்சல் உடை அணிந்து குளிக்கும் வகையில் இருப்பதை பார்த்து இன்ப அதிர்ச்சியாகி உள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

From Around the web