ஆண்கள் தங்கும் விடுதிக்குள் ப்ரியா பவானி சங்கர்- ஹாஸ்டல் படத்தின் பின்னணி..!

 
ஆண்கள் தங்கும் விடுதிக்குள் ப்ரியா பவானி சங்கர்- ஹாஸ்டல் படத்தின் பின்னணி..!

மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த ‘அடி கப்பியாரே கூட்டமணி’ படம் தமிழில் ஹாஸ்டல் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அசோக் செல்வன், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கடந்த 2016-ம் ஆண்டு தயன் சீனிவாசன் மற்றும் நமீதா பிரமோத் நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் ‘அடி கப்பியாரே கூட்டமணி’. ஆண்டுகள் விடுதிக்குள் நுழையும் ஒரு பெண்ணை, நாயகன் மறைக்க முயற்சிக்கிறார். இறுதியில் விடுதியை விட்டு அந்த பெண் வெளியேறினாரா இல்லையா என்பதே படத்தின் கதை கரு.

முழுக்க முழுக்க நகைச்சுவை திரைக்கதையுடன் அமைக்கப்பட்ட இந்த கதையை பார்ப்பவர்களுக்கு சிரித்து சிரித்து வயிறு வலியே வந்துவிடும். பல காலமாக இந்த படத்தை தமிழில் ரீமெக் செய்யும் முயற்சிகள் நடைபெற்று வந்தன. தற்போது அது நிறைவேறியுள்ளது.

தமிழில் அசோக் செல்வன் மற்றும் ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் இந்த படம் ‘ஹாஸ்டல்’ என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தை சுமந்த ராமகிருஷ்ணன் என்பவர் இயக்கியுள்ளார், குளிர் 100 டிகிரி படத்திற்கு இசையமைத்த போபோ சசி இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

மலையாள திரைக்கதை அப்படியே தமிழுக்கு மாற்றி மிகவும் சுவாரஸ்யமான வகையில் ஹாஸ்டல் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிக்கிவிக்கின்றனர். நாசர், முனீஷ்கார்ந்த், சதீஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விரைவில் இந்த படத்தின் வெளியீட்டு விபரங்கள் அறிவிக்கப்படவுள்ளன. 

From Around the web