'பேட் கேர்ள்' சர்ச்சை : ஒரு படத்தின் டீஸரைப் பார்த்துவிட்டு கருத்து சொல்லக் கூடாது - ஆர்.கே.செல்வமணி..!

வெற்றிமாறன் மற்றும் அனுராக் கஷ்யாப் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட் கேர்ள்’. இதன் டீஸர் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இணையத்தில் பலரும் இதனை கடுமையாக விமர்சித்தார்கள். பல்வேறு பிரபலங்களும் இப்படத்தின் டீஸருக்கு தங்களது விமர்சனத்தை முன்வைத்தார்கள்.
இப்படத்தின் மீதான சர்ச்சை குறித்து ஆர்.கே.செல்வமணி, “சாதம் கொதித்துக் கொண்டிருக்கும்போது சில அரிசிகள் வெளியே வந்துவிடும். அதை பார்த்துவிட்டு சாதம் வேகவில்லை என்று சொல்ல முடியாது. ‘அரங்கேற்றம்’ படத்தின் டீஸரை இப்போது வெளியிட்டால் 100 மடங்கு அப்படத்திற்கு எதிர்கருத்துகள் வரும். ஆகையால் ஒரு படத்தின் டீஸரைப் பார்த்துவிட்டு கருத்து சொல்லக் கூடாது.
அப்படத்தினை முழுமையாக பார்த்துவிட்டுதான் கருத்து சொல்ல வேண்டும். அந்த டீஸரில் உள்ள காட்சிகள் சரியா, தவறா என்பதை படம் வந்தவுடன்தான் சொல்ல முடியும். படம் பார்க்காமல் கருத்து சொல்வது அரைவேக்காடுதனமாக தான் நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.