"பேட் கேர்ள்" குட்டி ப்ளூ பிலிம்..: கஸ்தூரி விளாசல்..! 

 
1

நடிகை கஸ்தூரி தந்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது வயசு கோளாறை பத்தி எடுக்கப்பட்ட பல தமிழ் படங்களின் கடைசி அவதாரம்தான் இந்த படம்.. இதுபோன்ற ஒரு லைட் ப்ளூ கலர் படங்கள் ஒன்றும், தமிழகத்தில் முதல் முயற்சி கிடையாது.. நிறைய படங்கள் வந்திருக்கு. "வாஞ்சரைக்குள்ள வண்டி", திரிஷா இல்லேன்னா நயன்தாரா, இருட்டு அறையில் முரட்டு குத்து, இப்படி வெவ்வேறு காலகட்டங்களில் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.. வயசுக்கோளாறு அல்லது பாலியல் இச்சைகளை வெளிச்சமிடும் படங்கள் நிறைய வந்துள்ளன.

 

இந்த படம் பெண்ணுரிமை பற்றி பேசும் அல்ல.. வயசு கோளாறை நியாயப்படுத்தக்கூடிய அலலது வயசு கோளாறை சித்தரிக்கக்கூடிய ஒரு அசட்டு பிசட்டு படம்..

இந்த படம் பெண்ணுரிமை பற்றியதா? குழந்தையை படிக்க வைப்பதற்காக பாடுபட்ட ஒரு பெண்ணின் கதையா இது? அல்லது வேலைக்கு போகும் பெண், பாலியல் அச்சுறுத்தலுக்கு ஆளாகி, அதை தைரியமாக அட்கொண்ட பெண்ணின் கதையா இது? அல்லது படிக்கவே கூடாது என்று மதத்தின் பெயரால் ஒடுக்கப்பட்ட ஒரு பெண், தடைகளை உடைத்து, பெரிய படிப்பு படிச்ச பெண்ணின் கதையா? என்னது இது?

10ம் கிளாஸ்ல படிக்கிறதுக்கு பதிலாக ஏதோ பசங்க பின்னாடி அலையற ஒரு அவுசேரி பெண்ணுடைய கதை. இது நாட்டுக்கு முக்கியமா? இந்த காடசி நல்லா இருக்கும் போலயே என்று, ரசிக்கும்படியான சீன் ஏதாவது அந்த டிரெயிலரில் இருக்கா?ஒரு பெண்ணின் வயசு கோளாறை படமாக எடுப்பதே தவறுதான்.. இந்த டிரெயிலரை பார்த்தால், குட்டி மினி ப்ளூபிலிம் மாதிரி இருக்கு. முகம் சுழிக்கும் அளவுக்கு காட்சிகள் டிரெயிலரில் இருக்கு.

படிக்க போற இடத்துல, ஊர் மேய போறேன்னு சொல்றதை, 2 மணி நேரம் பெருமையா படமாக எடுத்து தந்தால், அதை யாருமே விரும்ப மாட்டார்கள்.. 

ஆசாரியமான குடும்பத்தை சேர்ந்த பெண், அவுசாரியாக போவதுதான் கதை என்றால், சிறந்த பக்தி மிக்க குடும்பங்கள், சிறந்த ஒழுக்கமிக்க குடும்பங்கள், பிராமண சமூகத்தை தவிர வேறு எங்குமே இல்லை என்று இந்த படத்தின் பெண் டைரக்டர் நினைக்கிறாரா? அல்லது வெற்றிமாறன் நினைக்கிறாரா? ஒழுக்கமான குடும்பம் என்றால், பிராமண குடும்பத்தைதான் காட்டுவீங்களா? அப்படியென்றால், அது தமிழ்நாட்டில் உள்ள அத்தனை பேருக்குமான ஒரு இழிவுதான்" என்று கொந்தளித்து கூறியிருக்கிறார் கஸ்தூரி

From Around the web