வீல் சேரும் வரும் ’பாக்கியலட்சுமி’ கோபி- அதிர்ச்சி தரும் படங்கள்..!!

பாக்கியலட்சுமி சீரியல் நடித்து மிகவும் பிரபலமான சதீஷ் வீல் சேரில் அமர்ந்து சாலையில் வலம் வரும் படங்கள் இணையதளங்களில் வெளியானது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
sathish

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஓடும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் சதீஷ். சமீப காலமாக அவர் குடித்துவிட்டு சாலையில் விழுந்து கிடப்பது போன்ற காட்சிகள் அதிகளவு சீரியலில் வந்து கொண்டிருக்கின்றன.

இது ரசிகர்களிடையே மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. எப்படி இருந்த கோபி, இப்போ இப்படியாகிட்டாரே என்று அவர்களில் பலரும் கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கோபி வீல் சேரில் சாலைப் பகுதிகளில் வலம் வரும் புகைப்படங்களை இணையத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

இதனால் சதீஷுக்கு என்ன நடந்தது? அவருக்கு உடல்நலப் பாதிப்பு ஏதாவது ஏற்பட்டுவிட்டதா? என்று நெட்டிசன்கள் பலரும் கமெண்டு செய்து வருகின்றனர். ஆனால் கோபி அந்த புகைப்படத்துக்கு கீழே ”Just for fun; நான் நன்றாக தான் இருக்கிறேன்” என அவர் விளக்கம் கொடுத்துள்ளார். 

From Around the web