சீரியல் துவங்கும் முன்பே பிரபல நடிகையை மாற்றிய சேனல்..!!
சீரியல் ஒளிபரப்பை துவங்குவதற்கு முன்பே, முக்கிய நடிகை ஒருவரை மாற்றப்பட்ட விவகாரம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Apr 19, 2023, 17:05 IST
விரைவில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகவுள்ள சீரியல் ‘அண்ணா’. நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலுக்கு பிறகு மிர்ச்சி செந்தில், இந்த நாடகத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். அண்ணன் மற்றும் அவருடைய 5 தங்கைகளை மையப்படுத்திய சீரியலாக ‘அண்ணா’ தயாராகி வருகிறது.
அண்மையில் தான் இந்த சீரியலில் ப்ரோமோ வெளியானது. முன்னதாக பாக்கியலட்சுமி சீரியல் புகழ் ரித்திகா, அண்ணா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். ஆனால் அவர் ப்ரோமோவில் இடம்பெறவில்லை.
இதுதொடர்பாக விசாரிக்கும் போது, ‘அண்ணா’ சீரியலுக்கான ஒளிபரப்பை துவங்குவதற்கு முன்பே ரித்திகாவுக்கு பதில் வேறொரு நடிகையை நிகழ்ச்சிக் குழு ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால் எதற்காக அவர் மாற்றப்பட்டு, வேறொரு நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்பது தெரியவில்லை.