வணங்கான் திரைப்படத்தின் மூலம் ஒரு கம்பேக் கொடுத்துள்ளார் பாலா - செய்யாறு பாலு விமர்சனம்..! 

 
1

வணங்கான் கதை:

இன்றைய காலகட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் பாலியல் தொடர்பான வழக்குகளுக்கு இப்படத்தில் முக்கிய தீர்வு கொடுத்திருக்கிறார் பாலா. காலம் காலமாக பெண்களை நீங்கள் இப்படித்தான் பார்ப்பீர்களா? என்று பெண்களைத் தாண்டி ஒரு விஷயத்தை பாலா திரைப்படத்தில் சொல்லி இருக்கிறார். வழக்கமாக பாலாவிற்கு மாற்றுத் திறனாளிகள் மீது மிகப்பெரிய கரிசனம் உண்டு. நாம், மாற்றுத் திறனாளிகளை பார்க்கும் பார்வை வேறகாக இருக்கும், பாலாவின் பார்வை வேறாக இருக்கும். இதைத்தான் இந்த படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

அதில், வாய் பேச முடியாத, காது கேளாத அருண் விஜய், லேடீஸ்ஹாஸ்டலுக்கு வாட்ச் மேனாக வேலைக்கு செல்கிறார். அங்கு கண் தெரியாத, மாற்றுத்திறனாளிகளை அன்புடன் கவனித்துக்கொள்கிறார். இந்த நேரத்தில் தான் அங்கு, கண் தெரியாத பெண்களுக்கு ஒரு சம்பவம் நடக்கிறது இதனால், கொதித்துப்போன அருண் விஜய், 3 கொலைகளை செய்கிறார். மூன்று கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கும் போது, கொலையை நான் தான் செய்தேன் என்று ஒத்துக்கொள்ளும் அருண்விஜய், அதற்கான காரணத்தை சொல்ல மறுக்கிறார். இதை போலீசார் எப்படி கண்டுபிடித்தார்கள், அருண் விஜய்க்கு என்ன தண்டனை கிடைத்தது என்பதுதான் வணங்கான் படத்தின் கதை. இத்திரைப்படம் அக்மார்க் பாலா படம் என்று சொல்லும் அளவிற்கு, அருண் விஜய், உடை, பாவனை அனைத்தும் பக்காவாக இருந்தது.
 

2018ம் ஆண்டு நாச்சியார் படம் வெளியானது. அந்த படத்திற்கு பிறகு பாலா எந்த திரைப்படத்தையும் இயக்கவில்லை. இதனால் பாலா இனி படத்தை இயக்க மாட்டார், பாலா காணாமல் போய்விட்டார் என்று சொன்னவர்களுக்கு, பாலா வணங்கான் திரைப்படத்தின் மூலம் ஒரு கம்பேக் கொடுத்து, சரியான பதிலடி கொடுத்து இருக்கிறார் என்று செய்யாறு பாலு அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.

From Around the web