பாலாஜி முருகதாஸ், சோம்சேகரை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் அஸ்வின்..!

 
அஸ்வின் குமார் லக்ஷ்மிகாந்தன்

தமிழகத்தில் பலரும் விரும்பும் தொலைக்காட்சி நடிகர்கள் / பிரபலங்கள் பட்டியலில் பல்வேறு முக்கிய நபர்களை பின்னுக்கு தள்ளி குக் வித் கோமாளி அஸ்வின் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனம் தொலைக்காட்சி ஆண் பிரபலங்கள் குறித்த கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியுள்ளது. அது தொடர்பான தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி தமிழக ரசிகர்களால் அதிகமாக விரும்பப்படும் டிவி பிரபலமாக அஸ்வின் லக்ஷ்மிகாந்தன் முதலிடத்தை பிடித்துள்ளார்.

அவரை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 4 மூலம் பிரபலமான பாலாஜி முருகதாஸ் இரண்டாம் இடத்தையும் கலர்ஸ் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆர்.ஜே. விஜய் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். அவர்களை தொடர்ந்து மற்றொரு பிக்பாஸ் பிரபலமான சோம சேகர் நான்காவது இடத்தையும் ஆரி அர்ஜுனனும் பெற்றுள்ளனர்.

இந்த பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்துள்ளார் சித்தி 2 சீரியல் பிரபலம் நந்தன் லோகநாதன். எட்டாவது இடத்தில் ரோஜா சீரியல் புகழ் சிப்பு சூரியனும் 9-வது இடத்தில் தொலைக்காட்சி பிரபலமான ரியோ ராஜும், பத்தாவது இடத்தில் ஜீ டிவி புகழ் விஷ்ணு விஜய்யும் இடம்பிடித்துள்ளனர்.  

From Around the web