ஓ.டி.டி-யில் அறிமுகமாகும் பாலகிருஷ்ணா..!

 
பாலகிருஷ்ணா

தெலுங்கில் பிரபல ஹீரோக்கள் ஓடிடியில் களமிறங்குவது புதிய ட்ரெண்டாக மாறியுள்ளது. அந்த வகையில் புதியதாக ஓடிடி-க்குள் வரவுள்ளார் தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகராக நந்தமுரி பாலகிருஷ்ணா.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான வெங்கடேஷ் மற்றும் அவருடைய உறவினரும் நடிகருமான ராணா டகுபாத்தி இணைந்து நெட்ஃப்ளிக்ஸுகாக ஒரு சீரியல் நடித்து வருகின்றனர். ’ராணா நாயுடு’ என்கிற பெயரில் உருவாகும் இந்த சிரீஸ் ஹாலிவுட்டில் தயாரான ‘ரே டானவன்’ சீரியலில் ரீமேக்காகும்.

இவர்களை தொடர்ந்து தெலுங்கு சினிமாவின் மற்றொரு மூத்த நடிகராக பாலகிருஷ்ணா ஓ.டி.டி-யில் களமிறங்குகிறார். நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சொந்தமான ‘ஆஹா’ என்கிற ஓடிடி பிளாட்ஃபாரமில் ‘டாக் ஷோ’ ஒன்றை தொகுத்து வழங்கவுள்ளார்.

முன்னதாக இதே ஆஹா ஒடிடி பிளாட்ஃபாரமில் சமந்தா உள்ளிட்ட தெலுங்கு சினிமா பிரபலங்கள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றனர். மேலும் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஆஹா ஓடிடி நிறுவனம் கைக்கோர்க்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாலகிருஷ்ணா தற்போது ‘அகாண்டா’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை போயாபட்டி ஸ்ரீனி இயக்கி வருகிறார். துவாராஹா கிரியேஷன்ஸ் என்கிற நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் ஸ்ரீகாந்த், ஜெகபதி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

From Around the web