‘பருத்திவீரன்’ திரைப்பட புகழ் நடிகர் செவ்வாழை ராசு காலமானார்..!!
May 18, 2023, 15:00 IST
கிழக்குச் சீமையிலே என்ற திரைப்படத்தில் பாரதிராஜாவால் அறிமுகமானவர்தான் செவ்வாழை ராசு. இவர் பல்வேறு படங்களிலும் பல கேரக்டரில் நடித்திருந்தாலும் இவருக்கு தனித்துவமான ஒரு அங்கீகாரம் இவருடைய குரல் வளம் தான். பருத்திவீரன் திரைப்படத்தில் இவருடைய கணீர் குரலால் பலரையும் கவர்ந்தார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த செவ்வாழை ராசு, இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.
இன்று அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் உள்ள கோரையூத்து கிராமத்திற்கு உடல் எடுத்து வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.