பீஸ்ட் 4-ம் கட்ட படப்பிடிப்பு- தேதி குறித்த படக்குழு..!

 
பீஸ்ட் படக்குழு
விஜய் நடிப்பில் உருவாகி வரும் ’பீஸ்ட்’ படத்துக்கான நான்காம் கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு தேதி குறித்துள்ளது. இதுதொடர்பான விபரங்களை பார்க்கலாம்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் படம் பீஸ்ட். இதில் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்துக்கு இதுவரை மூன்று கட்டங்களாக படப்பிடிப்பு நடத்தப்பட்டு முடிவடைந்துள்ளன.

விரைவில் நான்காம் கட்ட படப்பிடிப்பை படக்குழு துவங்கவுள்ளது. அதற்கக அவர்கள் அனைவரும் சேர்ந்து தேதியை முடிவு செய்துள்ளனர். அதன்படி வரும் செப்டம்பர் 1-ம் தேதி பீஸ்ட் படத்திற்கான 4-ம் கட்ட படப்பிடிப்பு துவங்குகிறது.

அதற்காக படக்குழு டெல்லி செல்லவுள்ளது. அங்கு ஐந்து நாட்கள் படப்பிடிப்பு நடைபெறுகிறது. தொடர்ந்து சென்னை திரும்பும் படக்குழு, அக்டோபர் முதல் வாரத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பை துவங்கும் என தகவல்கள் கூறுகின்றன.

From Around the web