ஷங்கர் படத்தில் ‘பீஸ்ட்’ பிரபலம்..!

 
இயக்குநர் ஷங்கருடன் நடன இயக்குநர் ஜானி

ராம்சரண் கதாநாயகனாக நடிக்கவுள்ள ஷங்கர் இயக்கும் படத்தில், பீஸ்ட் படத்தில் பணியாற்றும் பிரபலம் இணைந்துள்ளது சினிமா துறையில் தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருப்பவர் ஷங்கர். நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழை தவிர மற்ற மொழிகளில் படம் இயக்க விறுவிறுப்புடன் தயாராகி வருகிறார். முன்னதாக தெலுங்கில் ராம்சரண், கியாரா அத்வானி நடிக்கும் படத்தை இயக்குகிறார்.

பிரமாண்டமான பொருட்செலவில் தயாராகும் இந்த படத்தைல் தில்ராஜு தயாரிக்கிறார். ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் கதையாக இது தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த படத்தில் பணியாற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகின்றனர்.

அதன்படி ராம்சரண் - ஷங்கரின் தெலுங்குப் படத்தில் பீஸ்ட் பட பிரபலம் ஒருவர் இணைந்துள்ளார். விஜய் - நெல்சன் கூட்டணியில் உருவாகும் ‘பீஸ்ட்’ படத்தில் நடன அமைப்பு பணிகளை ஜானி மேற்கொள்கிறார். இவர் ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் வெளியான காதலன், பாய்ஸ் படங்களில் டான்ஸராக பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் முதன்முதலாக ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் தெலுங்குப் படத்தில் நடன இயக்குநராக இணைந்துள்ளார். இவருடைய வரவு இந்த படத்தின் மீது எதிரபர்ப்பை எகிறச் செய்துள்ளது.

From Around the web