நவம்பரில் பூசணி உடைக்கும் பீஸ்ட் படக்குழு..!
Sep 15, 2021, 08:35 IST
நடிகர் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் அனைத்து படப்பிடிப்பு பணிகளும் நவம்பர் மாதத்துடன் நிறைவடையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, இயக்குநர் செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வரும் படம் ‘பீஸ்ட்’. இந்த படத்திற்கான படப்பிடிப்பு முதற்கட்டமாக அமெரிக்காவின் ஜியார்ஜியா மாகாணத்தில் நடைபெற்றது. அதை தொடர்ந்து சென்னை, ஹைதராபாத் போன்ற நகரங்களில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இம்மாத துவக்கத்தில் நான்காம் கட்ட படப்பிடிப்பு மீண்டும் சென்னையில் தொடங்கியது. அதையடுத்து டெல்லி நகரத்தில் 5 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. அதை முடித்துக்கொண்டு விரைவில் சென்னை திரும்பும் படக்குழு, வரும் நவம்பர் மாத இறுதியுடன் படப்பிடிப்பை முடித்துக்கொள்கின்றனர்.
அடுத்தாண்டு பொங்கலுக்கு பீஸ்ட் படம் வெளியாகிறது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். பட வெளியீட்டுக்கு முன்னதாகவே பாடல்கள் மற்றும் டீசர் வெளியிடப்படவுள்ளன. தீபாவளிக்கு பிறகு இதற்கான ப்ரோமோஷன் பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 - cini express.jpg)