டிசம்பர் வரை நடைபெறும் பீஸ்ட் பட படப்பிடிப்பு- அப்போ ரிலீஸ்..?

 
பீஸ்ட்

விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு டிசம்பரை வரும் நடைபெறும் என்பதால், அப்படத்தின் ரிலீஸ் அடுத்தாண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் பீஸ்ட். விஜய் நடிக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். இயக்குநர் செல்வராகவன், யோகி பாபு, அபர்ணா தாஸ், ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கடந்த டிசம்பர் 2020-ம் ஆண்டு கொரோனா இரண்டாம் அலையின் போது இந்த படத்துக்கான படப்பிடிப்பு தொடங்கியது. அதை தொடர்ந்து அமெரிக்காவின் ஜியார்ஜியா, சென்னை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் இப்பட படப்பிடிப்பு நடந்து வந்தது. விரைவில் இந்த படம் முடிக்கப்பட்டு, இந்தாண்டு டிசம்பருக்குள் பீஸ்ட் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பீஸ்ட் படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் டிசம்பர் வரை தொடரும் என தெரியவந்துள்ளது. அதனால் பொங்கலுக்கு இந்த படம் வெளியாகாது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் பீஸ்ட் படம் 2022 ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

From Around the web