மாஸ்டர் சாதனையை முறியடிக்கும் முனைப்பில் பீஸ்ட்..!

 
விஜய்

விஜய் நடிக்கும் படங்கள் தொடர்பான அறிவிப்புகள் மற்றும் பதிவுகள் ட்விட்டரில் வரிசையாக சாதனைகளை படைப்பது வழக்கம். அந்த வகையில் மாஸ்டர் படம் படைத்த சாதனையை விரைவில் முறியடிக்கவுள்ளது பீஸ்ட் படம்.

ட்விட்டர் வலைதளத்தில் அதிகப்பட்சமான லைக்குகள் பெற்ற புகைப்படப் பதிவு, போஸ்டர் உள்ளிட்ட சாதனைகளை விஜய் படங்களிடத்தில் தான் உள்ளன. கடந்தாண்டு விஜய் மரம் நட்ட புகைப்படம் 4,72,000 லைக்குகளுடன் முதலிடத்தில் உள்ளன.

அதேபோல மாஸ்டர் படம் நெய்வேலியில் நடந்த போது, ரசிகர்களுடன் விஜய் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படப் பதிவு 4,53,000 பைக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் மாஸ்டர் படத்தின் முதல் பார்வை போஸ்டர் 3,08,000 லைக்குகளுடன் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் கடந்த மாதம் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டது. ட்விட்டர் வலைதளத்தில் இந்த போஸ்டருக்கு இதுவரை 3,06,000 லைக்குகள் கிடைத்துள்ளன. விரைவில் இந்த பதிவு மாஸ்டர் படத்தின் முதல் பார்வை போஸ்டர் படைத்த சாதனையை முறியடிக்கவுள்ளது. 

From Around the web