டாக்டருக்கு பிறகு தான் பீஸ்ட்- நெல்சன் திலீப்குமார்..!

 
நெல்சன் திலீப்குமார்

இயக்குநர் நெல்சன் திலீப்குமாரிடம் பீஸ்ட் பட அப்டேட் குறித்து கேட்டதற்கு அவர் வெளியிட்ட்ட பதில் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோலமாவு கோகிலா படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நெல்சன் திலீப்குமார். இவர் அடுத்ததாக சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘டாக்டர்’ படத்தை இயக்கி முடித்தார்.

இந்த படம் வெளியாவதற்கு முன்னதாகவே விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. தற்போது இந்த படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் சென்னை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் நடந்து வருகிறது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படம் வரும் 9-ம் தேதி வெளிவரவுள்ளது. அதை முன்னிட்டு பல்வேறு ப்ரோமோஷன் பணிகள் நடந்து வருகின்றனர். இதற்காக சிவகார்த்திகேயன், நெல்சன் திலீப்குமார் உள்ளிட்டவர்கள் விளம்பரப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது பலரும் அவரிடம் பீஸ்ட் படம் குறித்த அப்டேட் பற்றி கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், டாக்டர் படம் வெளியீட்டுக்கு வந்த பிறகு தான் ‘பீஸ்ட்’ படம் வெளியாகும் என அவர் கூறியுள்ளார். இதற்கிடையில் பீஸ்ட் படத்தின் அடுத்த அப்டேட் டீசர் தான் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

From Around the web