பாகுபலி’யை மிஞ்சிய பிரமாண்டம்.. அதிர வைக்கும் ‘கண்ணப்பா’ டீசர்..!

 
1
’பாகுபலி’ படம் தான் பிரம்மாண்டமானது என கூறப்பட்டு வந்த நிலையில் அதை விட 10 மடங்கு பிரம்மாண்டம் ‘கண்ணப்பா’ படத்தில் உள்ளது என்பது இந்த படத்தின் சற்றுமுன் வெளியான டீசரிலிருந்து தெரிய வருகிறது. 

சிவ பக்தனான கண்ணப்பா தன்னை அழிக்க வரும் எதிரிகளை பழிவாங்கும் ஸ்டண்ட் காட்சிகள், ஆக்ரோஷமான ஆக்சன் காட்சிகள், உருக வைக்கும் பக்தி காட்சிகள், அண்ணன் தம்பி இடையே நடக்கும் பங்காளி போர் காட்சிகள் என ஒரு நிமிட டீசரில் அசரவைக்கும் காட்சிகள் உள்ளதை அடுத்து இந்த படம் பாகுபலியை விட பல மடங்கு பிரம்மாண்டமாக இருக்கிறது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்த படத்தில் விஷ்ணு மஞ்சு, மோகன் பாபு, மோகன் லால், பிரபாஸ், அக்ஷய்குமார், சரத்குமார், காஜல் அகர்வால் என ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே நடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாக்கி உள்ளதை அடுத்து இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘கண்ணப்பா’ திரைபப்டம் நிச்சயம் ’பாகுபலி’ ’காந்தாரா’ போன்ற படங்களின் வசூலை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web