கமல்ஹாசனுடன் நடிப்பதை உறுதி செய்த பகத் பாசில்..!

 
கமல்ஹாசனுடன் நடிப்பதை உறுதி செய்த பகத் பாசில்..!

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தில் வில்லனாக ஏற்கனவே படக்குழுவினர் பரிசீலனை செய்து வந்த பிரபல நடிகர் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு முடிந்துவிட்டது. இதனால் கமல்ஹாசன் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்துவார் என்று சொல்லப்படுகிறது. அதில் முதலாவதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடிக்கும் ‘விக்ரம்’ பட வேலைகள் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக நடிக்க மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் பகத் பாசிலுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பிறகு, தேதிகள் ஒத்துவராததால் அவர் அந்த படத்தில் நடிக்கவில்லை என்று கூறப்பட்டது.

பிறகு அதே கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பிரபுதேவாவை அணுகியது படக்குழு. அவர் விக்ரம் படத்தில் நடிப்பார் என்கிற உறுதியான தகவல்கள் வெளியாகின. கடைசிநேரத்தில் அதுவும் இல்லை என்று ஆகிவிட்டது. அவரை தொடர்ந்து ராகவா லாரன்ஸிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

ராகவா லாரன்ஸ் ரஜினி ரசிகர் என்பதால் கமல்ஹாசன் படத்தில் அவர் நடிக்க மாட்டார் என்று ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டனர். இந்நிலையில் ஏற்கனவே முன்னதாக பேசப்பட்டு வந்த மலையாள நடிகர் பகத் பாசில் விக்ரம் படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது.

பிரபல ஆங்கில யூ-ட்யூப் சேனலுக்கு அவர் பேட்டியளித்த போது, கமல்ஹாசனுடன் தான் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இது கமல்ஹாசன் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. இதனால் விக்ரம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போதே உருவாகிவிட்டது. 
 

From Around the web