தியேட்டர்களில் இனி பகத் பாசில் படங்களுக்கு தடை?

 
தியேட்டர்களில் இனி பகத் பாசில் படங்களுக்கு தடை?

கொரோனா பரவலால் அதிகம் பாதிக்கப்பட்ட துறையாக  திரையுலகம் உள்ளது. இதனால் திரையுலகில் பெரிய பாதிப்பு  ஏற்பட்டு பல படங்கள் ஓடிடியில் வெளியிடப்பட்டு வருகின்றன. ஊரடங்கில் பல மாதங்கள் மூடப்பட்ட தியேட்டர்கள் திறக்கப்பட்டிருந்தாலும் கொரோனா 2வது அலை வேகமாக பரவுவதால் ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வருவதில் ஆர்வம் காட்டவில்லை.

மேலும் பல மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அறிவித்திருப்பதால் இரவு காட்சிகள் ரத்து செய்யப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை  தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இதனால் புதிய படங்களை தியேட்டர்களுக்கு பதிலாக நேரடியாக ஓ.டி.டி. தளங்களில் வெளியிடுவது  அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் பல படங்கள் ஓ.டி.டி. தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில் மலையாளத்தில் பகத் பாசில் நடித்துள்ள சி யூ சூன், இருள், ஜோஜி ஆகிய படங்கள் ஓ.டி.டி. தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.இதனால் தியேட்டர் அதிபர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

தியேட்டர்கள் திறக்கப்பட்ட போதும்  பகத் பாசில் படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாவதால் அவரது படங்களை இனிமேல் திரையரங்குகளில் திரையிட மாட்டோம் எனத் தெரிவித்துள்ளனர். ஆனாலும் தடை குறித்து திரையரங்கு உரிமையாளர் சங்கம் தரப்பில் அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web