பாகுபலி எல்லாம் ஒன்னுமே இல்ல; ஆர்.ஆர்.ஆர் படம் பாருங்க: பிரம்மித்த லண்டன்..!

 

ராஜமவுலி இயக்கி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் ரஷ் காட்சிகளை பார்த்து மிரண்டு போனதாக உமைர் சந்து என்பவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் ராஜமவுலியில் கேரியர் கிராஃப் என்பது மிகவும் விசித்திரமானது. மகதீரா படம் வெளியான போது, இந்தியாவே அந்த படத்தை குறித்து தான் பேசி வந்தது. பிறகு ஒரு ஈயை வைத்து ‘நான் ஈ’ என்கிற படத்தை அவர் இயக்கி ரிலீஸ் செய்த போது, ரசிகர்கள் மகதீராவை மறந்துவிட்டனர். நான் ஈ படத்தை பிடித்துக் கொண்டனர்.

அதை தொடர்ந்து ‘பாகுபலி’ படம் இரண்டு பாகங்களாக வெளியானது. அதுவரை ராஜமவுலி என்றால் ‘நான் ஈ’ தான் என்று கருத்து தெரிவித்த ரசிகர்கள் பாகுபலியை கண்டதும் பிரம்மித்து போனார்கள். தற்போது ராஜமவுலி என்றால் பாகுபலி தான் என்கிற பேச்சு உள்ளது. 


கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் ‘ஆர்.ஆர்.ஆர்’ என்கிற படத்தை அறிவித்தார் ராஜமவுலி. இந்தியாவின் சுதந்திர போராட்ட வீரர்கள் இருவரின் வாழ்க்கை வரலாறாக இந்த படம் மிகுந்த பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வருகிறது. வரும் ஆகஸ்டு 13-ம் தேதி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் லண்டன் தணிக்கை குழுவின் உறுப்பினராக உள்ள உமைர் சந்து, ஆர்.ஆர்.ஆர் படத்தில் ரஷ்களை பார்த்துள்ளார். அதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஆர்.ஆர்.ஆர் படம் பார்த்தால் பாகுபலி மறந்து போய்விடும். இந்த படம் வெளியானால் நிச்சயம் மக்களை இதை தான் கொண்டாடுவார்கள். பாகுபலி படத்தையே மறக்கடிக்கும் வகையில் ஆர்.ஆர்.ஆர் படம் சிறப்பாக உருவாகியுள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளார். தற்போது உமைர் சந்துவின் பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. 

From Around the web