டாம் க்ரூஸ் படத்தில் பாகுபலி பிரபாஸ்..? அதிர்ச்சியில் பாலிவுட் நடிகர்கள்..!

 
தனுஷ், பிரபாஸ்

தொடர்ந்து தென்னிந்திய சினிமாவைச் சேர்ந்த பல்வேறு நடிகர்கள் ஹாலிவுட்டில் தயாராகும் முக்கிய படங்களில் பிரதான கதாபாத்திரங்கள் ஏற்று நடிப்பது பாலிவுட் திரையுலகத்தில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இந்தியளவில் புகழ்பெற்ற நடிகர் தனுஷ் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘தி கிரே மேன்’ என்கிற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ஆவெஞ்சர்ஸ் படத்தை இயக்கிய சகோதரர்கள் தான் இயக்குகின்றனர். ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ள இந்த படத்தில் கிறிஸ் ஸ்டீவென்ஸ், ராயன் கோஸ்லிங் போன்ற ஹாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கிறார். தவிர, தி கிரே மேன் தொடர்ந்து பல்வேறு பாகங்களாக தயாராகவுள்ளது. அந்த படங்களிலும் தனுஷின் கதாபாத்திரம் இடம்பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷை தொடர்ந்து ஹாலிவுட் சினிமாவில் பிரமாண்ட நடிகர் படத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


உலகளவில் டாம் க்ரூஸுக்கு மிகப்பெரிய புகழை பெற்று தந்த ‘தி மிஷின் இம்பாஸிபிள்’ வரிசைப் படங்களின் ஏழாவது பாகம் விரைவில் தயாராகவுள்ளது. இந்த படத்திலும் டாம் க்ரூஸ் தான் கதாநாயகன். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு படத்தின் இயக்குநரான கிறிஸ்டோபர் மெக்குவார் பிரபாஸை சந்தித்து கதை சொன்னதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து ரசிகர் ஒருவர் இயக்குநர் கிறிஸ்டோபரிடம் ட்விட்டர் வாயிலாக கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதிலளித்துள்ள அவர், பிரபாஸ் மிக திறமையான மனிதர் தான். ஆனால் நாங்கள் இருவரும் ஒருபோதும் சந்தித்ததே இல்லை என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் பிரபாஸ் ஹாலிவுட் படத்தில் நடிப்பது தொடர்பான வெளியான தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 
 

From Around the web