சுதாகர் பற்றிய உண்மைகளை புட்டு புட்டு வைத்த பாக்யா..குடும்பத்தினர் ஷாக்..!

பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்டில் சுதாகர் பேசியதை நினைத்து ரூமில் கதறி அழுது கொண்டிருக்கிறாள் பாக்யா. மறுநாள் காலையில் கோபி ஈஸ்வரி செழியன் மற்றும் ஏழில் நான்கு வரும் ஹாலில் அமர்ந்து இனியா பற்றி பேசி கொண்டிருக்கின்றனர். அப்போது டூரில் இருந்து இனியா அனுப்பிய போட்டோக்களை பார்த்து சந்தோஷமாக பேசுகின்றனர். அப்போது பாக்யா வர, அவளிடம் பேச்சு கொடுக்கிறாள் ஈஸ்வரி.
பாக்யா அமைதியாக இருக்க, இப்ப எதுக்கு நீ மூஞ்ச தூக்கி பரண் மேல வைச்சிருக்க. இனியாவை நினைச்சு உனக்கு சந்தோஷமாவே இருக்காதா என்று கேட்கிறாள். உடனே பாக்யா, எப்பவும் பிள்ளைகளை பத்தியே நினைச்சுட்டு இருக்க முடியாது. எனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு என்கிறாள். அதனை தொடர்ந்து செழியன் நீ இப்படியெல்லாம் பேச மாட்டீயே அம்மா. ஏதோ நடந்து இருக்கு. என்னன்னு சொல்லு என கேட்கிறான். எழிலும் மறுபடியும் கேட்கிறான்.
அதன்பின்னர் பாக்யா, என்னோட ரெஸ்டாரன்ட் இதுவரை யாரும் தொட முடியாத மைல் ஸ்டோனை தொட்டு இருக்கு என்று சொல்கிறாள். அவள் சொல்வதை புரிந்து கொள்ளாமல் இதுக்கு சந்தோஷம் தான படனும் என கேட்கின்றனர். அதற்கு பாக்யா, ஆமா என் ரெஸ்டாரண்டை தாரை வார்த்து கொடுத்துட்டேன். அதான் நான் சந்தோஷமா இருக்கேன் என்கிறாள். உடனே ஈஸ்வரி, உன் பொண்ணு பேர்ல தான எழுதி கொடுத்து இருக்க. அப்பறம் என்ன என கேட்கிறாள்.
அதற்கு பாக்யா, உங்களுக்கு அது மட்டும் தானே தெரியும். அதுக்கப்புறம் நேத்து வந்து உங்க பணக்கார சம்பந்தி பேசுனது எதுவும் உங்களுக்கு தெரியாதுல. என் பொண்ணை வைச்சு ரெஸ்டாரண்ட்டை வாங்கிட்டாரு. உங்களுக்கும் அந்த ரெஸ்டாரண்டுக்கு எந்த சம்பந்தமும் இல்லைன்னு என்னை துரத்திட்டாரு என்று கோபமாக சொல்கிறாள். ஆனால் அப்போதும் சுதாகருக்கு சப்போர்ட் பண்ணி பேச, அவர் என்னை ஏமாத்துனதை விட, நீங்க எல்லாரும் அவருக்கு சப்போர்ட் பண்ணி பேசுறது தான் கடுப்பா இருக்கு.
இனிமே நீங்க யாரும் எனக்கு அட்வைஸ் பண்ண வேணாம். என் பொண்ணுக்காக ரெஸ்டாரண்ட் கொடுத்ததா நினைச்சுக்கிறேன். எப்பவுமே ஜீரோல இருந்து ஆரம்பிப்பேன். அதே மாதிரி இப்பவும் ஆரம்பிச்சுக்கிறேன் என சொல்லி விட்டு போகிறாள். இதனையடுத்து சுதாகரை பார்ப்பதற்காக அவனுடைய வீட்டுக்கு கோபி, செழியன் கிளம்பி செல்கின்றனர். அப்போது அவன் நல்லவனை போல் பேசி நடிக்கிறான். இப்படியாக இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் நிறைவடைந்துள்ளது.