விபத்தில் சிக்கிய பாக்கியலட்சுமி சீரியல் நடிகை..!

 
1

பாக்கியலட்சுமி சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது. கணவன் இல்லாமல் குடும்பத்தை தனது சொந்த செலவில் பார்த்துக் கொள்ளும் தைரியமான பெண் குறித்தே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.

இந்த சீரியலில் செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் கம்பம் மீனா.இவருக்கு ஹீரோயின் உடனேயே எப்போதும் இருக்கும் பாசிட்டிவ் ரோல் ஆரம்பத்தில் இவர் பாக்கியலட்சுமி சீரியலில் அறிமுகமாகும் போது இவருடைய குரலை வைத்தும், இவருடைய உடல் மொழியை வைத்து பலர் கலாய்த்து வந்தனர். ஆனால் இப்போது அதிகமானோர் இவருடைய கேரக்டரை பாராட்டி வருகின்றனர். தன்னுடைய நடிப்பால் பலரையும் கவர்ந்திருக்கிறார் இவர் சீரியல் மட்டும் அல்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில், கம்பம் மீனா செல்லமுத்து நேற்று விபத்தில் சிக்கி இருக்கிறார். இவ்வாறு அவர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து, பரிதாபமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

From Around the web