புதிய கதைக்களத்துடன் வெளியான பாக்கியலட்சுமி சீரியல் ப்ரோமோ... அப்போ நீங்க இன்னும் திருந்தலையா? 

 
1
பாக்கியலட்சுமி சீரியலில் ஈஸ்வரி விடுதலையாகி யாருமே எதிர்பார்க்காத வகையில் நீ என் பிள்ளை இல்லை என்று கோபியை தலைமுழுகின்றார். மேலும் தனக்கு ஒரு மகள் தான் அது பாக்கியா  மட்டும்தான் என்று சொல்லுகின்றார்.

இந்த நிலையில், தற்போது வெளியான ப்ரோமோ ஒன்றில், சென்னையில் ஃபேவரிட் சாப்பாடு ஒன்றை செலக்ட் பண்ணுவதற்காக போட்டி ஒன்று நடத்தப்படுகின்றது என கோபியின் செஃப் கோபிக்கு சொல்லுகிறார்.

அதேபோல மறுபக்கம் இந்த செய்தியை பழனிச்சாமி பாக்கியாவுக்கு சொல்ல, பாக்கியா தயங்கிய போது ஈஸ்வரி அதில்  பங்குபற்றி வெற்றி பெற வேண்டும் என ஊக்கம் கொடுக்கின்றார்.

இதைத்தொடர்ந்து குறித்த போட்டியில் பாக்கியாவும் கோபியும் பங்கு பற்ற அங்கு நின்ற ஈஸ்வரியிடம் கோபி ஆசீர்வாதம் வாங்குகின்றார். ஆனால் ஈஸ்வரி அவரை ஆசீர்வாதம் பண்ணாமல் இந்த போட்டியில் பாக்கியா தான் வெற்றி பெற போகிறார் என்று சவால் விடுகின்றார்.

இதை அடுத்து கோபி மீண்டும் பாக்கியாவை சீண்டி நீ இந்த போட்டியில் தோற்கப் போகிறார் என தெனாவட்டாக பேசுகிறார். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ.

From Around the web