பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள பாக்கியலட்சுமி சீரியல்..!

 
1

கோபியிடம் இனியா மனம் திறந்து பல விஷயங்களை பேசியதால் அதில் மனமுடைந்து போகின்றார் கோபி. அதன் பின்பு ராதிகா வீட்டுக்கு செல்ல அவரும் கோபியை கண்டபடி திட்டி சண்டை போட்டதோடு அவரை வீட்டை விட்டு வெளியே போகுமாறும் கூறுகின்றார்.

இதனால் கோபி காரில் போகும்போது நடந்தவற்றை எல்லாம் யோசித்துக் கொண்டே செல்கின்றார். இதன்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்படுகின்றது. இதனால் ராதிகாவுக்கு கால் பண்ண அவர் போனை ஆன்சர் பண்ணவில்லை.

இதை தொடர்ந்து செழியன், இனியாவுக்கு கால் பண்ண அவர்களும் எடுக்கவில்லை. இறுதியாக பாக்கியாவுக்கு கால் பண்ணுகின்றார். கோபியின் ஃபோனை பார்த்த பாக்கியா எதற்காக எனக்கு கால் பண்ணுகிறார் என்று யோசிக்க, இதன்போது கோபிக்கு தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு வீதியில் இருப்பதாக வாய்ஸ் போடுகிறார். உடனே பாக்கியா கிளம்பிச் செல்கின்றார்.

இன்றைய எபிசோடில் கோபிக்கு நல்லபடியாக ஆப்ரேஷன் முடிகின்றது. ஆனால் ராதிகா கோபி இன்னும் வீட்ட வரவில்லை என்று எல்லாருக்கும் போன் பண்ணி கேட்டதோடு பாக்கியா வீட்டிற்கும் சென்று பார்க்கின்றார். அங்கு அவர்களுடைய கதவு பூட்டி இருக்கின்றது.

இந்த நிலையில், தற்போது வெளியான ப்ரோமோவில், ராதிகாவுக்கு விஷயம் தெரிந்து ஹாஸ்பிடல் செல்ல அங்கு பாக்கியா உங்க ஹஸ்பண்டுக்கு ஹார்ட் அட்டாக் வந்து நான்தான் ஹாஸ்பிடலில் கொண்டு வந்து சேர்த்தேன் என்று சொல்லுகின்றார். இதன்போது பதறியடித்து உள்ளே போன ராதிகாவை ஈஸ்வரி தடுத்து நிறுத்தி, உன்னால தான் எனது மகனுக்கு இந்த நிலைமை என்று அவரை பார்க்க விடாமல் தடுக்கின்றார்.

இதன் போது ஹாஸ்பிடலில் கோபிக்கு மருந்து வாங்குவதற்காக பில்லை கொடுக்க, அங்கிருந்த நேர்ஸ் பாக்கியா தான் அவருடைய மனைவி அவரிடம் கொடுக்குமாறு சொல்லுகின்றார். இதை கேட்டு  ராதிகா அதிர்ச்சி அடைகின்றார். 

From Around the web