ஹிப் ஹாப் தமிழா ஆதியை மேடையிலேயே வச்சு செஞ்ச பாக்யராஜ்..!

 
1
’பிடி சார்’ என்ற திரைப்படத்தின் சக்சஸ் மீட் நடந்த நிலையில் அதில் பாக்யராஜ் கலந்து கொண்டார். அவர் மேடையில் பேசியபோது ஹீரோ ஹிப்ஹாப் தமிழா ஆதியை வைத்துக்கொண்டு அவரை வச்சு செஞ்சது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விழாவில் அவர் பேசியபோது ’முன்பெல்லாம் 100 நாள் 150 நாள் ஓடினால் மட்டுமே அதை வெற்றிப்படம் என்று சொல்லி அதற்காக விழா எடுத்துக் கொண்டாடுவோம். ஆனால் இப்போது ஐந்து நாள், ஆறு நாள் ஓடினாலே அதை வெற்றிப்படம் என்று சொல்லி விழா கொண்டாடுகிறார்கள்.
 
மேலும் நாங்கள் திரைப்படம் இயக்கும்போது, படம் ரிலீஸ் ஆகும் வரைக்கும் யாருக்கும் படத்தை திரையிட்டு காட்ட மாட்டோம், தயாரிப்பாளருக்கு கூட சில நேரம் காண்பிக்கவில்லை. ஆனால் இப்போது எல்லாம் ரிலீஸ்க்கு முன்னாடியே பத்திரிகையாளர்களுக்கு படத்தை போட்டு காண்பித்து விடுகிறார்கள். அவர்கள் ரிலீசுக்கு முன்னாடியே நெகடிவ் விமர்சனங்களையும், சில பில்டப் விமர்சனங்களையும் கொடுக்கிறார்கள். அதனால் அந்த விமர்சனங்களை பார்த்து படத்துக்கு வருபவர்களுக்கு ஏமாற்றம் ஏற்படுகிறது’ என்று சரமாரியாக பேசினார்.

’பிடி சார்’ படத்தின்  வெற்றி விழாவில் கலந்து கொண்டு அந்த படத்தின் குழுவினர்களையே குறிப்பாக ஹிப்ஹாப் தமிழா ஆதியை அவர் கலாய்த்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே புளூ சட்டை மாறன் உட்பட பலர் தங்கள் சமூக வலைத்தளங்களில் போலியாக சக்சஸ் மீட் கொண்டாடி வருவதை கலாய்த்து வரும் நிலையில் பாக்யராஜ் நேரடியாக கலாய்த்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web