சாந்தனு திருமணம் குறித்து பாக்யராஜ் எழுதிய கடிதம்..!
அம்மாவின் கைபேசி, கோடிட்ட இடங்களை நிரப்புக என தொடர்ந்து பல திரைப்படங்களை நடித்து வந்த சாந்தனு அவரின் நடிப்பினால் முன்னேறி வந்தாலும் கூட அந்த திரைப்படங்கள் அனைத்தும் தெரிய வரவேற்கை பெறாமல் இருந்தது.இருப்பினும் தனது carrier ஐ கைவிடாமல் அதன் பின் தேர்ந்தெடுக்கும் திரைப்படங்களின் கதைகளை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதை தொடர்ந்து சமீபத்தில் மாஸ்டர் மற்றும் ப்ளூ ஸ்டார் என்னும் திரைப்படம் வெளியானது. அந்த திரைப்படத்தில் நாயகனாக இல்லாமல் சைடு ரோலில் தான் நடித்திருந்தார்.இருப்பினும் அந்த திரைப்படம் திரையரங்குகளில் பெரிய வரவேற்பை பெற்று வந்தது. முதலில் கதாநாயகனாக நடித்து வந்த சாந்தனு அதன் பிறகு தற்போது சைடு ரோலிலும் நடிக்க ஆரம்பித்து விட்டார் ஏனென்றால் அவருக்கான அங்கீகாரம் ஒழுங்காக கிடைக்கவில்லை என்பதுதான் இதற்கு காரணமாக உள்ளது.
இந்த நிலையில் 2015 ஆம் ஆண்டில் ஒரு பிரபல தொகுப்பாளியான கீர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சாந்தனு. இவர்கள் இருவரின் திருமணமும் இரு வீட்டாரின் சம்மதத்தோடு நடைபெற்றது. இவர்களின் காதலுக்கு பச்சை கொடி காட்டிய பாக்கியராஜ் அவரின் கைப்பட ஒரு கடிதம் ஒன்றையும் எழுதி பத்திரிக்கையாளர்களுக்கு அனுப்பியுள்ளார். இந்த நிலையில் இத்தனை வருடங்கள் கழித்து நடிகர் கயல் தேவராஜ் அந்த கடிதத்தை தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது பாக்கியராஜ் எழுதி இருப்பது என்னவென்றால்!!! மரியாதைக்குரிய பத்திரிக்கையாளர் நண்பர்களுக்கு, பாக்கியராஜ் மற்றும் பூர்ணிமா தம்பதிகளின் பணிவான வணக்கம். ஒரு இனிய நற்செய்தி, எங்கள் வீட்டில விசேஷம்!! எங்கள் மகன் சாந்தனுவிற்கு திருமணம் நிச்சியம் ஆகி உள்ளது. எங்களின் பெண் சரண்யா தற்போது திருமணம் வேண்டாம் என்றும் சிறிது காலம் கழித்து திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி இருப்பதால் தற்போது மகன் சாந்தனுவிற்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளோம்.
எனவே எங்கள் வீட்டில் முதல் திருமணம் எங்களின் மகன் சாந்தனுவிற்கு நடக்க உள்ளது. திருமணப் பெண்ணின் வீட்டாரும் ஒரு கலை குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான். பிரபல நடன இயக்குனர் ஜெயந்தி மற்றும் விஜயகுமாரின் மகளான கீர்த்தியை தான் சாந்தனு திருமணம் செய்ய போகிறார். இதற்கான வரவேற்பு நிகழ்வு நடைபெற போவதாகவும் விரைவில் அதற்கான பத்திரிக்கை தயாராகும் என்றும் அனைவரும் வருமாறு அந்த கடிதத்தில் எழுதி உள்ளார் நடிகர் மற்றும் இயக்குனரான பாக்யராஜ் அவர்கள்!!தற்போது இந்த பதிவு இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு பாக்யராஜ் செய்த செயலை பலரும் பாராட்டி வருவதோடு மட்டுமல்லாமல் மகள் இருக்கையில் மகளுக்கு ஏன் முதலில் திருமணம் செய்ய வேண்டும் என்ற பலவாறு கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்!!