ஈஸ்வரிக்கு பாக்யா கொடுத்த அதிர்ச்சி..! 

 
1

இன்றைய பாக்கியலட்சுமி சீரியல்  எபிசோட்டில், பாக்யாவின் கடை திறப்பதற்கான வேலைகள் மும்முரமாக நடக்கிறது. அனைவரும் ஒவ்வொருவராக வந்து கொண்டிருக்கின்றனர். அதன்பின்னர் விளக்கு ஏற்ற போகும் போது, ஜெனி பாட்டிக்கு போன் போட்டு பார்க்கலாம்ல என சொல்கிறாள். ஆனால் பாக்யா எதுக்கு இன்னொரு தடவை போன் பண்ணி திட்டு வாங்கனும் என்கிறாள். அப்போது கோபி அங்கு வருகிறான்.

பாக்யாவிடம் நீ ரெண்டு ரெஸ்டாரண்ட் வைச்சு பெரிய இடத்துக்கு போன. இப்போ இப்படி ஒரு நிலைமை ஆகிருச்சு. நீ மறுபடியும் பெரிய இடத்துக்கு வரனும் என கோபி வாழ்த்து சொல்கிறான். இந்தப்பக்கம் இனியா அம்மாவின் கடை திறப்பு விழாவுக்காக கிளம்ப வரும்போது, நிதிஷ் நம்ம சித்தப்பா வீட்டுக்கு போறோம். அவர் வர சொல்லிருக்காரு என்கிறான். இதனால் அதிர்ச்சியடையும் அவள் இன்னொரு நாள் போகலாம் என சொல்ல, அவர் வெளிநாடு போறாரு.

அதான் இன்னைக்கே வர சொல்றாரு என்கிறாள். இதனால் இனியாவும் வேற வழி இல்லாமல் ஓகே சொல்கிறாள். இந்தப்பக்கம் திடீரென ஈஸ்வரி அங்கு வருகிறாள். இதனால் பாக்யா ஹேப்பி ஆகிறாள். அதனை தொடர்ந்து செழியன் நீங்க போய் விளக்கு ஏத்தி வையுங்க என சொல்ல, அவள் முன்னாடி வருகிறாள். அதற்குள் பாக்யா விளக்கேற்றி வைக்கிறாள். இதனால் ஈஸ்வரி ஷாக்காகி பின்னாடி வந்துவிடுகிறாள்.

அதனை தொடர்ந்து கடை பெயர் ரிவில் பண்ணும் போது, அதில் பாக்கியலட்சுமி மெஸ் என வருகிறாள். இதனை பார்த்து ஈஸ்வரிக்கு மற்றொரு அதிர்ச்சி ஆகிறாள். அதன்பின்னர் கொஞ்ச நேரத்தில் ஈஸ்வரி கிளம்புறேன் என சொல்ல, அவளை கோபியே அழைத்து கொண்டு போகிறான். அவனிடம் பாக்யாவை பற்றி குற்றம் சொல்லி கொண்டே வருகிறாள். கோபி அவளிடம் எனக்குள்ள ஒரு குற்றவுணர்ச்சி இருக்கு. திடீர்ன்னு இனியாவுக்கு கல்யாண ஏற்பாடு பண்ணேன். அந்த பிரஷர்ல தான் இந்த மாதிரி ஆகிட்டாள் என சொல்கிறான்.

அதற்கு ஈஸ்வரி, நீ இனியாவோட கல்யாணத்துக்காக தான் இவ்வளவு பண்ணி இருக்கே. அவ அவளோட வாயால தான் கெட்டு போயிருக்க என்கிறாள். இந்தப்பக்கம் அனைவரும் சாப்பிட உட்காரும் போது செல்வி வந்து ஜெனியிடம் பேசுகிறாள். ஆனால் அவள் முகம் கொடுக்காமல் இருக்க, பாக்யா அவளிடம் செல்வி மேல ஏன் கோபமா இருக்க என கேட்கிறாள்.

அதற்கு ஜெனி அவுங்களால தான் வீட்ல எல்லா பிரச்சனையும் நடந்தது. என்னால உடனே மனசை மாத்திக்க முடியலை ஆண்ட்டி என்கிறாள். இப்படியாக இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் நிறைவடைந்துள்ளது.

From Around the web