முன்னாள் முதல்வர் என்.டி.ஆருக்கு பாரத ரத்னா- சிரஞ்சீவி கோரிக்கை..!
 

 
என்.டி.ஆர் மற்றும் சிரஞ்சீவி

ஒருங்கிணைந்த ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், மறைந்த நடிகருமான என்.டி.ஆருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என நடிகர் சிரஞ்சீவி கோரிக்கை விடுத்துள்ளார்.

என்.டி.ஆர் ராமராவின் 98-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஊரடங்கு நேரத்திலும் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் ரசிகர்கள் என்.டி.ஆரின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான என்.டி.ஆர், 1982-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் பாணியில் கட்சியை தொடங்கி ஒருங்கிணைந்த ஆந்திராவின் 1983-ம் ஆண்டில் முதல்வராக பதவி வகித்தார்.

அதை தொடர்ந்து மூன்று முறை முதல்வராக பதவி வகித்த அவர், 1996-ம் ஆண்டு மறைந்தார். இந்நிலையில் அவருடைய 98-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நடிகர் சிரஞ்சீவி இந்த கோரிக்கையை எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர் மறைந்த பிறகு அசாமிய பாடகர் பூபேன் ஹசரிகாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. விரைவில் என்.டி.ஆருக்கு 100-வது பிறந்தநாள் வரவுள்ள நிலையில் இந்த விருது அறிவிக்கப்பட வேண்டும் என சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.

From Around the web