பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்..!

 
பாரதி கண்ணம்மா சீரியல் குழு
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த பிரபல நடிகர் தொடரை விட்டு வெளியேறியுள்ள விபரம் தெரியவந்துள்ளது.

தொலைக்காட்சி பார்வையாளர்களிடம் மிகப்பெரியளவில் வரவேற்பு பெற்ற தொடர்களில் ஒன்று ‘பாரதி கண்ணம்மா’. இந்த சீரியலில் இரண்டாவது கதாநாயகனாக நடித்து வந்தவர் அகிலன் புஷ்பராஜ்.

இவர் தற்போது பிரபுதேவா நடிக்கும் படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அகிலன் அவ்வப்போது சமூகவலைதளங்களில் வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் அகிலனுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. இதனால் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகியுள்ளார். தொடர்ந்து கால்ஷீட் கொடுக்க முடியவில்லை என்கிற காரணத்தால் அவர் விலகிவிட்டதாக கூறப்படுகிறது.

தற்போது அவர் நடித்து வந்த கதாபாத்திரத்தில் சுகேஷ் என்கிற நடிகர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அகிலன் புஷ்பராஜ் பீட்சா 3, விஷாலுடன் இணைந்து ஒரு படம் மற்றும் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்கும் இரண்டு படங்கள் என நான்கு படங்களில்  நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

From Around the web