பாரதி கண்ணம்மா சீரியலுக்குள் வந்த புதிய நடிகர்..!

 
பாரதி கண்ணம்மா சீரியலுக்குள் வந்த புதிய நடிகர்

பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து அகில் விலகியதை தொடர்ந்து, அவருடைய கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய நடிகர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிரபல சீரியல் பாரதி கண்ணம்மா. இதில் கதாநாயகனாக நடிக்கும் பாரதி கதாபாத்திரத்தின் சகோதரராக அகிலன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் அகில்.

சமீபத்தில் இவருக்கு திரைப்பட வாய்ப்பு கிடைத்ததை அடுத்து அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார். இதனால் மாற்று நடிகரை தேடும் பணியில் தயாரிப்பு நிர்வாகம் ஈடுபட்டது. இதன்மூலம் ஒரு நடிகரை நிர்வாகம் இறுதி செய்துள்ளது.

இந்நிலையில் அஞ்சலிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. அதில் அகிலனுக்கு பதிலாக வேறு ஒருவர் இடம் பெற்றிருந்தார்.

அதனால் புதிய அகிலாக நடிகர் ஒருவர் இணைந்துள்ளார். அந்த நடிகருடன் பாரதி எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

From Around the web