இறுதி அத்தியாயத்தில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல்..?

 
11

பாரதிகண்ணம்மா சீரியலில் இறுதி அத்தியாயம் என பலமுறை சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கும் சீரியலின் இயக்குனர் இந்த முறையாவது கிளைமாக்ஸ் காட்டுவாரா என சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் கிழித்து தொங்க விடுகின்றனர்.

BarathiKannamma

சந்தேகப்படும் கணவனை பிரிந்து தனியொரு பெண்ணாக வாழ்த்து காட்டுகிறாள் கண்ணம்மா. ஆனால் காலம் பாரதிக்கு எல்லா உண்மையை புரிய வைக்கிறது. அதன்பிறகு உண்மையை தெரிந்துக்கொண்ட பாரதி, கண்ணம்மாவுடன் சேர விரும்புகிறார். ஆனால் அதை ஏற்காத கண்ணம்மா, தனது சொந்த ஊருக்கு வருகிறார். அங்கு நடக்கும் ஒரு பிரச்சனையில் பாரதியை வில்லன் தாக்குகிறான். அப்போது பாரதி சுய நினைவை இழக்க, அதற்காக பழைய கண்ணம்மாவாக அவர் முன்னோடி தோன்றி பழைய நினைவுகளை திருப்பி வரவழைக்கிறார். 

BarathiKannamma

பாரதி பழைய நினைவுகள் வர, கண்ணம்மாவும் பாரதியுடன் இணைந்து வாழ சம்மதிக்கிறார். இதையடுத்து இருவருக்கும் மீண்டும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது. இந்த திருமணத்திற்காக தன் கையாலேயே கண்ணம்மாவிற்கு புடவை நெய்கிறார் பாரதி. பின்னர் பாரதி கண்ணம்மாவிற்கு அந்த கிராமத்திலேயே திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. எப்படியோ நீண்ட நாட்களாக இழுவையாய் சென்றுக் கொண்டிருந்த பாரதி கண்ணம்மா நிறைவுபெறுவதில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சிதான். 


 

From Around the web