29 வயதில் திருமணம், 8 மாதத்தில் கணவர் தற்கொலை- பவானியின் பின்னணி..!

 
மறைந்த கணவருடன் பவானி ரெட்டி

பிரபல சீரியல் நடிகை பவானி ரெட்டி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளதை அடுத்து, அவருடைய பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகி பலரையும் சோகமடையச் செய்துள்ளது.

ஆந்திராவைச் சேர்ந்த பவானி ரெட்டி தமிழ் சீரியல்களில் நடிக்க தொடங்கியதை அடுத்து அவருக்கான ரசிகர் வட்டம் அதிகரித்தது. குறிப்பாக விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வந்த ‘சின்ன தம்பி’ என்கிற சீரியலில் நடித்து அவர் மேலும் பிரபலமானார்.

இடையில் சன் டிவி சீரியலில் நடித்து வந்த அவர், பிறகு அதிலிருந்து விலகிவிட்டார். நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் தொலைக்காட்சிக்கு ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார்.

திருமணமான ஏழே மாதத்தில் பவானி ரெட்டி கணவர் தற்கொலை செய்துகொண்டார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இதுதொடர்பான விஷயங்களை அவர் இதுவரை வெளியில் சொல்லாமல் இருந்தார். ஊடகங்களும் அவரிடம் இதுகுறித்து கேட்கவில்லை.

இந்நிலையில் சக பிக்பாஸ் போட்டியாளரான இசைவாணியிடம் கணவர் குறித்த தகவல்களை அவர் பகிர்ந்துகொண்ட ப்ரோமோ வெளியானது. அதில் தற்கொலை செய்துகொண்டார் கணவர் என்றதும் நான் அதிர்ச்சியில் உட்கார்ந்துவிட்டேன். அதற்கு பிறகு என்ன நடந்தது என்று யோசித்து, கவலைப்பட்டேன். ஒவ்வொரு வாழ்க்கையில் ஒவ்வொரு சோகம் இருக்கத்தானே செய்கிறது என்று கூறினார்.

கணவர் குறித்து எப்போது பவானி ரெட்டி வெளியில் பேசியது கிடையாது. முதல்முறையாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் பேசியுள்ளது பவானி ரெட்டி மீது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அவர் அதை வலிமையாக கடந்துவந்துவிட்டதாக நெட்டிசன்கள் சிலர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

From Around the web