நடிகர்களுக்கும் அட்ஜெஸ்ட்மெண்டு பிரச்னை உள்ளது- குமுறிய ஹீரோ..!!
சினிமா, சின்னத்திரை என நடிகைகள் பலர் பாலியல் ரீதியாக பிரச்னைகளை சந்தித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுப்பி வருகின்றனர். பொழுதுப்போக்கு துறையில் பெண்களுக்கு மட்டும் தான் இந்த பிரச்னை என்று இல்லை. பல ஆண்களும் நடிகைகளால் பாலியல் சீண்டலுக்கு ஆளாகி வருகின்றனர்.
ஆனால் ஆண் என்கிற காரணத்தால் பலரும் அதை வெளியே கூறுவது இல்லை. இந்நிலையில் பிரபல போஜ்புரி நடிகரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கிஷன் தனக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல் குறித்து பகிரங்கமாக பேசியுள்ளார்.
சினிமாவில் நடிக்க துவங்கிய காலக்கட்டத்தில், ஒரு பிரபலமான நடிகை எனக்கு போன் செய்தார். அப்போது அவர் கதாநாயகியாக நடிக்கும் படத்தில், நான் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தேன். போன் செய்தவர் என்னிடம் இரவு காபி குடிக்க வருமாறு அழைத்தார். அவருடைய நோக்கம் எனக்கு புரியவந்ததை அடுத்து, நான் முடியாது என்று கூறி போனை வைத்துவிட்டேன்.
அதை தொடர்ந்து நான் ஒப்பந்தம் செய்யப்பட்ட படத்தில் இருந்து நீக்கப்பட்டேன். அந்த நடிகை யாரென்று என்னால் இப்போது கூற முடியாது. இன்றும் அவர் பிரபலமான நடிகையாக உள்ளார். என் தந்தை எப்போதும் குறுக்கு வழியை விரும்ப மாட்டார். அதனால் நானும் உண்மையாக இருக்க விரும்பினேன் என்று ரவி கிஷன் பேசியுள்ளார்.