வசூலை வாரி குவிக்கும் ’கைதி’ இந்தி ரீமேக் ’போலா..’!!

விடுமுறை தினத்தை குறிவைத்து இந்தியில் அஜய்தேவ்கன் நடிப்பில் வெளியான ‘போலா’ படத்தின் வசூல் தாறுமாறாக அதிகரித்து பாலிவுட் பாக்ஸ் ஆஃபிஸை அதிரவைத்துள்ளது.
 
ajay devgan

கடந்த 2019-ம் ஆண்டு தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், அர்ஜுன் தாஸ், ஜார்ஜ் மரியன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‘கைதி’. வெறும் ரூ. 25 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம், ரூ. 150 கோடி வசூல் புரிந்து சாதனை படைத்தது.

இந்த படத்தை அஜய்தேவ்கன் இந்தியில் ‘போலா’ என்கிற பெயரில் ரீமேக் செய்துள்ளார். இந்த படத்தில் தபு, சஞ்சய் மிஷ்ரா, தீபக் தோப்ரியல், வினீத் குமார், கிரண் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை அஜய் தேவ்கனே தயாரித்து இயக்கியுள்ளார்.

மார்ச் 30-ம் தேதி விடுமுறை நாட்களை குறிவைத்து வெளியான இந்த படம், ரிலீஸான நாளில் சுமாரான அளவில் வசூலை ஈட்டியதாக சொல்லப்படுகிறது. ஆனால் அடுத்தநாளில் இருந்து இதனுடைய வசூல் பெருமளவும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

சென்ற வெள்ளி முதல் ஞாயிறு வரையிலான 3 நாட்களில் ரூ. 30 கோடி வசூலீட்டியுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. அதுவும் இந்த படம் வெளியான 3 நாட்களில் ரூ. 12 கோடி வரை வசூல் புரிந்துள்ளது. தமிழ் பதிப்பில் இல்லாத சில மாற்றங்கள் இந்த படத்தில் செய்யப்பட்டுள்ளன.

ரூ. 100 கோடி பட்ஜெட்டில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி இருக்கும் இந்த படம், முதல்நாளில் ரூ. 11.20 கோடி வசூல் செய்திருந்தது. அதற்கு அடுத்தநாள் ரூ. 18.60 கோடியும், மூன்றாம் நாள் முடிவில் ரூ. 30 கோடியும் வசூலை குவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியில் பதான், து ஜோதி மெயின் மகார் படங்களை தொடர்ந்து, நடப்பாண்டில் மூன்றாவது மிகப்பெரிய ஓப்பனிங்கை பெற்றுள்ளது ‘போலா’ படம். இனி வரும் நாட்களிலும் இந்த படம் மிகப்பெரிய வரவேறபை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  
 

From Around the web