‘பிச்சைக்காரன் 2’ ஸ்னீக் பீக் டிரெய்லர் வெளியீடு !

 
1

சசி இயக்கத்தில் வெளியான ‘பிச்சைக்காரன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. கோடீஸ்வர தொழிலதிபர் ஒருவர், தனது அம்மாவிற்காக பிச்சைக்காரன் அவதாரம் எடுப்பதே இப்படம். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனியே இயக்கி நடித்துள்ளார். இதுதவிர இந்த படத்திற்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.

Pichaikaran 2

இந்த படத்தில் மலையாள நடிகை காவ்யா தாப்பர் கதாநாயகியாக நடித்துள்ளார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 16-ஆம் தேதி மலேசிய நாட்டில் உள்ள லங்கா தீவில் நடைபெற்றது. அப்போது கடலில் ஜெட் ஸ்கை படகை இயக்கிய போது விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டது.  இந்த விபத்தில் அவருக்கு முகம், தாடை, பற்களில் பலத்த காயம் ஏற்பட்டது.‌ இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது பூரண குணமடைந்தார். 

Pichaikaran 2

இதையடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் 4 நிமிட ஸ்னீக் பீக் டிரெய்லர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் வரலாற்றில் முதல்முறையாக இந்த காட்சி வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஸ்னீக் பீக் டிரெய்லர் காட்சி வரவேற்பை பெற்றுள்ளது. 

From Around the web