பிக்பாஸ் 3: ஜெர்மனியைச் சேர்ந்த தமிழர் 3-வது போட்டியாளராக அறிமுகம்..!!

 
மதுமிதா

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் மூன்றாவது போட்டியாளராக ஆடை வடிவமைப்பாளரும் ஜெர்மனியைச் சேர்ந்த தமிழருமான மதுமிதா அறிமுகம் செய்துவைக்கப்பட்டார்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி துவங்கியுள்ளது. கடந்த சீசன்களை போலவே இந்த சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளார். பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் துவக்கமாக கமல்ஹாசனின் அறிமுகம் அமைந்தது.

நிகழ்ச்சிக்கான துவக்கவுரையை முடித்துக் கொண்ட அவர, புதியதாக கட்டப்பட்டுள்ள பிக்பாஸ் சீசன் 5 வீட்டை பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். முந்தைய சீசன் போல இல்லாமல், பல்வேறு புதிய மாறுதல்களுடன் பிக்பாஸ் வீடு கட்டப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து நிகழ்ச்சி மேடைக்கு அவர் வந்தார். முதல் போட்டியாளராக இசைவாணியை அறிமுகம் செய்து வைத்தார். அவரை தொடர்ந்து பிரபல சின்னத்திரை நடிகர் ராஜூ நிகழ்ச்சியின் இரண்டாவது போட்டியாளராக அறிமுகமானார்.


பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வெளிநாடு தமிழர்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்புள்ளது. அதனால் மூன்றாவது போட்டியாளராக ஜெர்மனியைச் சேர்ந்த மாடல் மதுமிதா நிகழ்ச்சியில் அறிமுகமானார்.

இலங்கை தமிழரான இவர் ஜெர்மனியில் பிறந்து வளர்ந்தார். அதை தொடர்ந்து ஆடை வடிவமைப்பு கலையை பயின்று, அங்குள்ள முக்கிய நகரத்தில் மாடலாகவும் ஆடை வடிவமைப்பாளராகவும் உள்ளார். மேலும் தமிழ் படங்கள் சிலவற்றிலும் இவர் பணியாற்றி வருகிறார்.

பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அவரை இசைவானி மற்றும் ராஜு இருவரும் வரவேற்றனர். பிரபல பாடகி தீ வெங்கடேசன் மதுமிதாவின் நெருங்கிய தோழி என்கிற விபரத்தை இசைவானி அவரிடம் கூறினார். 
 

From Around the web