விறுவிறுப்பாக நடக்கும் பிக்பாஸ் 5 ப்ரோமோ ஷூட்..!

 
கமல்ஹாசன் பிக்பாஸ் ஷூட்

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான ப்ரோமோ தொடர்பாக எடுக்கப்பட்ட ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழில் பிக்பாஸ் சீசன் 5 விரைவில் துவங்கப்படுகிறது. செப்டம்பர் இறுதி வாரம் முதல் இதற்கான ஒளிப்பரப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது. போட்டியாளர்கள் முடிவு செய்யப்பட்டு, தடுப்பூசி போடப்பட்டு அவர்களும் தயாராகிவிட்டதாகவும் தெரிகிறது.

இந்நிலையில் பிக்பாஸ் புதிய சீசனுக்கான விளம்பர பணிகள் துவங்கியுள்ளன. வழக்கம் போல கமல்ஹாசன் புதிய சீசனையும் தொகுத்து வழங்கவுள்ளார். அதற்காக அவர் பங்கேற்ற ப்ரோமோ ஷுட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

காலை முதல் இரவு வரை நடக்கும் சம்பவங்களை ஒரே ஷாட்டில் நடக்கும் விதமாக புதிய ப்ரோமோ தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி கோட் சூட் அணிந்து ஜம்மென்று இருக்கும் ஒரு புகைப்படமும், இரவு நேர உடை அணிந்து நிற்கும் மற்றொரு புகைப்படமும் வெளியாகியுள்ளது.

வழக்கம்போல இந்த சீசனுக்கும் புதிய பிக்பாஸ் முத்திரை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. புதிய சீசன் குறித்த அறிவிப்பு வரும் வெள்ளியன்று வெளியாகலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
 

From Around the web