மன்னிப்பு கேட்ட பிக்பாஸ் நடிகை..!!

‘பிக் பாஸ்’ புகழ் உர்பி ஜாவேத் தனது வித்தியாசமான பேஷன் ஆடைகளுக்காக பிரபலமானவர். அவருடைய தனித்துவமான ஆடைகள் பெரும்பாலும் ஆச்சரியப்படவைக்கும். கயிறுகள், கம்பிகள், கற்கள், உடைந்த கண்ணாடிகள் அல்லது பூ இதழ்கள் போன்றவற்றைத் தேர்ந்தெடுத்து தனது உடலை மறைத்து புகைப்படங்களாக வெளியிடுவார்.
அதேசமயம், தன்னுடைய அதிரடிகளால் பலரின் மனதையும் சில சமயம் காயப்படுத்தியும் இருக்கிறார். அடிக்கடி ஆபாச மற்றும் வித்தியாசமான அரைகுறை ஆடைகளை அணிந்து பொதுவெளியில் போஸ் கொடுத்து வந்ததால், எந்நேரமும் இவர் லைம்லைட்டிலேயே இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.
உர்பி ஜாவேத் அணியும் கவர்ச்சி உடைகள் மாணவர்களை பாதிக்க செய்வதாக கண்டனங்களும் எழுந்துள்ளது. ஆனாலும் அவற்றை பொருட்படுத்தாமல் தொடர்ந்து கிளுகிளு படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது கவர்ச்சி உடைகள் அணிந்ததற்காக மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.
இதுகுறித்து உர்பி ஜாவேத் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “நான் அணிந்த உடைகள் மூலம் பலரது உணர்வுகளை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனிமேல் என்னை வேறு மாதிரியான உடையில் பார்ப்பீர்கள்'” என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் இவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தனர். மேலும் தாங்கள் எப்படி உடை அணிய வேண்டுமோ அது உங்கள் சுதந்திரம் என்றும், யார் சொன்னாலும் கேட்காதீர்கள் என்றும் பலரும் கருத்து தெரிவித்தனர். மேலும் சிலர் நிம்மதி என்றும், வாழ்த்துக்கள் என்றும், ஆச்சர்யம் என்றும் கமெண்ட் பதிவிட்டு வந்தனர்.
I apologise for hurting everyone’s sentiments by wearing what I wear . From now on you guys will see a changed Uorfi . Changed clothes .
— Uorfi (@uorfi_) March 31, 2023
Maafi
அதோடு உர்பியின் திடீர் முடிவால் ரசிகர்கள் குழம்பி போய் இருந்தனர். இந்த குழப்பத்துக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது ரசிகர்களுக்கு ‘ஏப்ரல் Fool’ என்று மற்றொரு பதிவையும் செய்துள்ளார். அந்த பதிவில், ‘April fool.. நான் ரொம்ப சிறுபிள்ளைத்தனமா இருக்கிறேன் என்று எனக்கே தெரியும்’ என்று சிரிக்கும் எமோஜியை வைத்து பதிவிட்டுள்ளார்.
இதற்கு பலரும் சிரிக்கும் எமோஜியுடன் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆடை சர்ச்சை நாயகி உர்பி ஜாவேத் தனது ரசிகர்களை ட்விட்டரில் ஏப்ரல் Fool செய்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.