சென்னை மருத்துவமனையில் உயிரிழந்த பிக்பாஸ் பிரபலம்..!

 
கத்தி மகேஷ்

தொலைக்காட்சி ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பு பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற பிரபல நடிகர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பரப்பட்டு வருகிறது. இதில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை இதுவரை நாகர்ஜூனா தொகுத்து வழங்கி வந்தார்.

புதிய சீசனை யார் தொகுத்து வழங்கவுள்ளார்கள் என்பது குறித்த விபரங்கள் இதுவரை தெரியவில்லை. இந்நிலையில் சமீபத்தில் வெளியான செய்தி தெலுங்கு பிக்பாஸ் ரசிகர்களிடையே மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்லது.

தெலுங்கு சினிமா மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானவர் கத்தி மகேஷ். இவர் தெலுங்கு பிக்பாஸின் முதல் சீசனில் பங்கேற்று அங்குள்ள ரசிகர்களிடையே கவனமீர்த்தார்.

சில தினங்களுக்கு முன்பு காரில் நண்பர்களுடன் சென்றுகொண்டிருந்துள்ளார் கத்தி மகேஷ். அப்போது எதிரே கட்டுப்பாட்டை இழந்து வந்த லாரி இவர்கள் பயணித்த காரில் மோதியுள்ளது. இதனால் மிகவும் படுகாயமடைந்தார் கத்தி மகேஷ்.

அவரை மீட்ட நண்பர்கள் உடனடியாக கடந்த 10-ம் தேதி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதித்துள்ளார். அதை தொடர்ந்து சிகிச்சை பலனின்றி கத்தி மகேஷ் உயிரிழந்துவிட்டார்.

இந்த தகவல் தெலுங்கு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கத்தி மகேஷின் மறைவுக்கு திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

From Around the web