வசந்தபாலன் படத்தில் மூன்றாவதாக இணைந்த பிக்பாஸ் பிரபலம்..!

 
சுரேஷ் சக்கரவர்த்தி

வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் வனிதா விஜயகுமார், அறந்தாங்கி நிஷாவை தொடர்ந்து சுரேஷ் சக்கரவர்த்தியும் இணைந்துள்ளார்.

ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் ஜெயில் படத்தை இயக்கி முடித்துள்ளார் வசந்தபாலன். கொரோனா பரவல் காரணமாக இன்னும் ரிலீஸ் செய்யப்படாமல் உள்ளது. இப்படம் ஓடிடியில் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதற்கிடையில் அவர் அடுத்து இயக்கி வரும் படத்தில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படம் மூலம் கவனமீர்த்த துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். இன்னும் படத்துக்கு பெயர் வைக்கப்படவில்லை.

இந்த படத்தில் வனிதா விஜயகுமார், அறந்தாங்கி நிஷா போன்ற முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்கள் முக்கிய கதாபாத்திரத்திரங்களில் நடிக்கின்றனர். அவர்களுடன் மற்றொரு பிக்பாஸ் பிரபலமான சுரேஷ் சக்கரவர்த்தியும் இந்த படத்தில் இணைந்துள்ளார்.

இதனால் வசந்தபாலன் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விரைவில் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

From Around the web