கமல்ஹாசன் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் பிக்பாஸ் பிரபலம்..!

 
விஜய் சேதுபதி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிக்பாஸ் பிரபலம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் படம் விக்ரம். கமல்ஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனுடைய முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை நடைபெற்றது. அதை தொடர்ந்து காரைக்குடியில் கமல், விஜய் சேதுபதி பங்கேற்ற காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானி நாராயணன் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இதுதொடர்பான தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் விக்ரம் படத்தில் முதன்மையான கதாநாயகி வேடத்தில் யார் நடிக்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஆண்ட்ரியா, நயன்தாரா உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
 

From Around the web