பிக்பாஸ் சீசன் 5 வருகை: இரண்டு சீரியல்களின் ஒளிபரப்பு ரத்து..!

 
பிக்பாஸ் சீசன் 5

விரைவில் பிக்பாஸ் சீசன் 5 ஒளிபரப்பாகவுள்ளதன் காரணமாக மக்களிடையே வரவேற்பு பெற்று வந்த இரண்டு தொடர்கள் இனி ஒளிபரப்பாகாது என்று தெரியவந்துள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி அடுத்த மாதம் 3-ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. அதற்கு பிறகு 4-ம் தேதி முதல் பிக்பாஸ் 5 இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாகவுள்ளது. 

இதன்காரணமாக அந்த நேரத்தில் ஒளிப்பரப்பாகி வந்த தேன்மொழி ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் செந்தூரப்பூவே ஆகிய தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. செந்தூரப்பூர்வே தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாகவும், தேன்மொழி ஊராட்சி மன்றத் தலைவர் சீரியல் முடிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது

From Around the web