தாறுமாறு பட்ஜெட்டில் தயாராகும் பிக்பாஸ் சீசன் 5- களமிறங்கும் சினிமா பிரபலங்கள்..!

 
பிக்பாஸ் சீசன் 5

இதுவரை பிக்பாஸ் சீசன்கள் தொலைக்காட்சி பிரபலங்கள் அதிகளவில் களமிறக்கப்பட்ட நிலையில், புதிய சீசனில் சினிமா பிரபலங்களை போட்டியாளர்களாக அறிவிக்க நிகழ்ச்சிக் குழு முடிவு செய்துள்ளது.

தமிழ் தொலைக்காட்சி பார்வையாளர்களிடையே மிகவும் வரவேற்பு பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சி பிக்பாஸ். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியில், இதுவரை ஒளிப்பரப்பான அனைத்து சீசன்களுமே தாறுமாறு ஹிட் அடித்துவிட்டன.

விரைவில் இதனுடைய ஐந்தாவது சீசன் துவங்கவுள்ளது. அதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் துவங்கிவிட்டதாக தெரிகிறது. இதுவரை ஒளிப்பரான சீசன்களில் தொலைக்காட்சி பிரபலங்கள் பெருமளவில் போட்டியாளர்களாக இருந்தனர்.

ஆனால் இந்த சீசனுக்கு நிகழ்ச்சிக்குழு பெரியளவில் முதலீடு செய்கிறது. அதன் காரணமாக இம்முறை திரைத்துறையைச் சேர்ந்த முக்கிய பிரபலங்கள் இடம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

அதேபோல முந்தைய சீசன்களில் பல்வேறு டாஸ்குகள் தொடர்ந்து இருந்து வந்தன. அவற்றை தூக்கி தூற எறிந்துவிட்டு புதிய டாஸ்க்குகளை அறிமுகம் செய்ய நிகழ்ச்சிக்கு முடிவு செய்துள்ளது. இந்த மாற்றங்கள் போட்டியாளர்களுக்கு பெரிய சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web