பிக்பாஸ் சீசன் 5-யா..? குக் வித் கோமாளி சீசன் 3-யா..? புகழ் என்ன சொன்னார் தெரியுமா..??

 
புகழ்

விரைவில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 மற்றும் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சிகளில் எந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளீர்கள் என்கிற கேள்விக்கு நடிகர் புகழ் சுவராஸ்யமான பதில் தெரிவித்தார்.

விஜய் தொலைக்காட்சி பிரபலங்களில் டிரெண்டிங்கில் இருப்பது புகழ் தான். இதன்மூலம் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கும் படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் சில படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் மீண்டும் அவர் விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. அதன்படி சமீபத்தில் அவர் அளித்த நேர்காணலில், பிக்பாஸ் 5ல் வருகிறீர்களா அல்லது குக் வித் கோமாளி 3ல் பங்கேற்பீர்களா என்கிற கேள்வி முன்வைக்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த புகழ், பிக்பாஸ் 5ல் கண்டிப்பாக நான் இல்லை ஆனால் குக் வித் கோமாளி 3ல் என்னை பார்க்கலாம் என கூறினார். இதனால் புகழின் வரவை எதிர்நோக்கி குக் வித் கோமாளி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

From Around the web