இன்று முதல் தொடங்கும் பிக்பாஸ் சீசன் 5 ஷூட்டிங்- இதுவேற லெவல் அப்டேட்..!

 
கமல்ஹாசன்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5-க்கான ஷூட்டிங் இன்று முதல் துவங்குகிறது. கமல்ஹாசன் பங்குபெறும் செட் ப்ரோமோ மற்றும் புதிய பிக்பாஸ் வீட்டுக்கான அறிமுகம் உள்ளிட்டவற்றுக்கு படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

தமிழ் தொலைக்காட்சி பார்வையாளர்களிடையே மிகவும் வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சி இதுவரை ஆறு சீசன்களாக ஒளிப்பரப்பப்பட்டுள்ளது. இதனுடைய ஐந்தாவது சீசனுக்கான பணிகள் துவங்கியுள்ளன.

அதன்படி சென்னைக்கு அருகேவுள்ள பிரபல தனியார் ஸ்டூடியோவில் பிக்பாஸ் சீசன் 5-க்கான ஷூட்டிங் இன்று முதல் துவங்குகிறது. இங்கு செட் ப்ரோமோ மற்றும் கமல்ஹாசன் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.

அதேபோல புதிய சீசனுக்கு ஏற்றவாறு பிக்பாஸ் முத்திரையும் மாற்றப்படுகிறது. முந்தைய சீசன்களை காட்டிலும் புதிய சீசனை விறுவிறுப்பாக கொண்டு செல்லும் பொருட்டு வேலைகள் நடைபெறவுள்ளதாகவும்.

மேலும் போட்டியாளர்களை தேர்வு செய்தவிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. விஜய் டிவி பிரபலங்களாக மட்டுமில்லாமல், மற்ற தொலைக்காட்சியை சேர்ந்த பிரபலங்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக இடம்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

From Around the web