புதிய நிபந்தனைகளுடன் விரைவில் துவங்கும் பிக்பாஸ் சீசன் 5..!

 
கமல்ஹாசன்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியின் புதிய சீசன் பல்வேறு புதிய நிபந்தனைகளுடன் விரைவில் துவங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக தொலைக்காட்சி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய சீசனுக்கான தயாரிப்பு பணிகள் வேகம் எடுத்துள்ளன. முந்தைய சீசனில் அனைத்து போட்டியாளர்களும் 14 நாட்கள் குவாரண்டைன் முடித்து போட்டியில் பங்கேற்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்தது.

அதேபோல புதிய இரண்டாவது சீசனில் பங்கேற்கவுள்ள போட்டியாளர்கள் கட்டாயம் 2 தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும், படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் மற்றவர்களும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்கிற புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதை பூர்த்தி செய்யக்கூடியவர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்க முடியுமாம்.

இந்த நிபந்தனைக்கு உட்பட்டவர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க முடியும். அதேபோல முந்தைய நான்கு சீசன்களையும் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தான் புதிய பிக்பாஸ் சீசனையும் தொகுத்து வழங்கவுள்ளார். ஏற்கனவே இதுதொடர்பான தகவலை அவர் தேர்தல் பிரசாரத்தின் போது உறுதி செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

From Around the web