பிக்பாஸ் புதிய சீசனில் ராணா- ரசிகர்களுக்கு அதிர்ச்சி..!

 
ராணா டகுபாத்தி

பாகுபலி படங்களில் நடித்து தேசியளவில் புகழடைந்த நடிகர் ராணா புதியதாக ஒளிப்பரப்பாகவுள்ள பிக்பாஸ் சீசனில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழைப் போலவே தெலுங்கிலும் பிக்பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய வரவேற்புள்ளது. விரைவில் அங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் துவங்கப்படவுள்ளது. இதற்கான ஆரம்பக் கட்ட பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன.

தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனை ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கினார். இரண்டாவது சீசனை நானி தொகுத்து வழங்கினார். மூன்றாவது மற்றும் ஐந்தாவது சீசன்களை நாகர்ஜூனா அக்கினேனி தொகுத்து வழங்கினார்.

ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களின் தயாரிப்பு பணிகள் தொடங்கவுள்ளதால் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இயலாது என நிகழ்ச்சி தரப்பிடம் நாகர்ஜூனா கூறிவிட்டதாக தெரியவந்துள்ளது.

அவருக்கு பதிலாக புதிய சீசனை தொகுத்து வழங்கும் வாய்ப்பு ராணாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் ராணா ஏற்கனவே நம்பர் 1 யாரி என்கிற ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கி ஹிட் செய்துள்ளார். அதனால் பிக்பாஸ் சீசன் 5-யை அவர் தொகுத்து வழங்கவுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

From Around the web