பிக்பாஸ் தமிழ் சீசன் 5 ஒளிப்பரப்பு தேதி அறிவிப்பு..!

 
கமல்ஹாசன்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ள பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான ஒளிப்பரப்பு தேதி மற்றும் நேரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தொலைக்காட்சி பார்வையாளர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இதுவரை 4 சீசன்கள் ஒளிப்பரப்பான இந்நிகழ்ச்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பதிவு செய்தது. இதனால் புதியதாக ஒளிப்பரப்பாகும் சீசன் மீது ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

முந்தைய சீசன்களை போல ஐந்தாவது சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கவுள்ளார். அதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இதுவரை பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான ஐந்து ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதன்படி சமீபத்தில் வெளியான புதிய ப்ரோமோவில் இந்நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் அக்டோபர் 3-ம் தேதி மாலை 6 மணிக்கு பிக்பாஸ் சீசன் 5 ஒளிப்பரப்பாகிறது. அப்போது போட்டியாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வும், புதிய பிக்பாஸ் வீட்டின் கட்டமைப்பும் காட்டப்படவுள்ளது.
 

From Around the web