பிக்பாஸ் தமிழ் சீசன் 5 போட்டியாளர்கள் இவர்கள் தான்- முழு விபரம்..!

 
பிக்பாஸ் தமிழ்

விஜய் தொலைக்காட்சியில் நாளை மறுநாள் முதல் ஒளிபரப்பாகவிருக்கும் பிக்பாஸ் சீசன் 5  நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.

 கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் நாளை மறுநாள் முதல் ஒளிப்பரப்பாகவுள்ளது. இந்த சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன.

புதியதாக வெளியாகியுள்ள தகவலின் படி சிலர் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா, நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகர் ராஜு, நடிகர் நிழல்கள் ரவி, நடிகை ப்ரியா ராமன், நடிகை பவானி ரெட்டி, பாடகி சின்னப்பொண்ணு, இமான் அண்ணாச்சி ஆகிய பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.

மேலும் ஷகீலா மகள் மிலா,மாடல் நடியா, நடிகை சூசன், கோபிநாத் ரவி, நிரூப் நந்தா, விஜே அபிஷேக், மாஸ்டர் படத்தின் மூலம் பிரபலமான நடிகர் சிபி சந்திரன், நமீதா மாரிமுத்து, பாடகி இசைவாணி, நடிகர் வருண் உள்ளிட்டோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது.
 

From Around the web